Skip to main content

முடிவுக்கு வந்தது 50 நாள் வேலை நிறுத்தம்... சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் 

Published on 19/04/2018 | Edited on 20/04/2018
vishal


கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து 50 நாட்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர் . இதனால் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்ட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் தமிழக அரசால் தான் இதை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று சினிமாத்துறையினர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு சார்பில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக நடிகரும், தயரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று ஸ்ட்ரைக் வாபஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், FEFSI தலைவர் RK செல்வமணி , கௌரவ செயலாளர்  SS துரைராஜ் , செயற்குழு உறுப்பினர்கள் RK . சுரேஷ் , உதயகுமார் , AL உதயா , பிரவீன்காந்த் , மிட்டாய் அன்பு மற்றும் SS குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசும்போது....." தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படபிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும். காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது. காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றார் விஷால். இதையடுத்து இந்த சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

"இது திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ghgh

 

 

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா சார்ந்த அனைத்து வேலைகளும் மத்திய அரசின் உத்தரவின் படி இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் ஆரம்பமானது. இருந்தும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருந்து வரும் நிலையில் தியேட்டர் அதிபர்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தியேட்டர்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில்...

 

"தமிழ்நாடு திரையரங்குகள் விரைவில் திறக்கப்படாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது ரிலீசுக்காக காத்திருக்கும் அனைத்து திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்குகிறது. அடுத்த 6 மாதங்களில் குறைந்தது 30 தமிழ் திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளது.

 

 

Next Story

நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழ் பட இயக்குனர்கள்!

Published on 31/10/2019 | Edited on 01/11/2019

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இன்று காலை வழங்கினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்து அவர் பேசியபோது... 

 

ns

 

''இன்று காலை 10 மணி அளவில் மதிற்பிற்குரிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஆர்.கே செல்வமணி, பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணை செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் எங்களின் கோரிக்கையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஆண்டிற்கு அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும், திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெரும் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் கிளையை சென்னையிலும் அமைக்கவேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகளை இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

 

 

மேலும் டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் விவாதித்தோம். அப்போது அவர் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நன்கு பதிலளித்தார். மேலும் உடனடியாக விலங்குகள் நல வாரியம் அமைச்சரை தொடர்புகொண்டு அவர்களுடன் வரும் 4ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்திடவும், அதில் அவருடன் நாங்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்து, அதில் நல்ல முடிவு கிடைக்க வழி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பிலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பிலும் எங்கள் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.