cinema celebrities about vijay political party name

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கட்சியின் பெயரை அறிவித்ததைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவிவ்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ், “உங்கள் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துகள் நண்பா. இந்த புதிய பயணத்தில் உங்கள் வெற்றிக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார். மேலும் நெல்சன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.