/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/susheel gowda.jpg)
கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியிலுள்ள நடிகர் சுஷீல் கௌடா தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கன்னட சினிமாவில் தற்போதுதான் இவருக்கு நடிகராக தோன்றும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி உடற்பயிற்சியாளராகவும் பணி புரிந்துவருகிறார்.இவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துனியா விஜய் நாயகனாக நடிக்கும்‘சலகா’ படத்தில் காவல் அதிகாரியாக இவர்நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us