Raai Laxmi

Advertisment

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் லட்சுமி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிண்ட்ரெல்லா'. பேண்டஸி ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2018ஆம் ஆண்டே வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகளை நிறைவுசெய்வதில் சிக்கல் எழுந்தது. தற்போது படத்தின் மொத்த பணிகளும் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி 'சிண்ட்ரெல்லா' திரைப்படம் வெளியாகவுள்ளது.

அதற்கான முன்னோட்டமாகப் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'சிண்ட்ரெல்லா' பட ட்ரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.