cibi chakravarthy explain vijay movie

Advertisment

அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கி இருந்தார். எஸ். ஜே சூர்யா, பிரியங்கா அருள், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில்வெளியான இப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தியின் அடுத்த படத்தையும் லைகா நிறுவனமேதயாரிப்பதாக முன் பணம்கொடுத்து ஒப்பந்தம் செய்தது.

இதனிடையே இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அதற்காகவிஜய்யை நேரில் சந்தித்து கதை சொல்லியதாகவும் தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இத்தவலைஇயக்குநர் சிபி சக்கரவர்த்தி தரப்பு மறுத்துள்ளது. இது தொடர்பாக இயக்குநருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, சிபி சக்கரவர்த்தி விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக பரவிய தகவல் உண்மையில்லை. டான் படத்தை தொடர்ந்து சிபி தற்போது தான் அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார். அதை முடித்த பிறகு தான் கதைக்கான நாயகனை தேர்வு செய்வார் எனத்தெரிவித்துள்ளனர்.

வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.