கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

tenet

கடந்த வாரத்திலிருந்து இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பதால் ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார் பிரதமர் மோடி. கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல படங்களின் வெளியீட்டுதேதி மாற்றப்பட்டு வருகிறது.

Advertisment

அந்த வரிசையில் தி பேட்மேன் படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து, அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றியிருப்பதாக வார்னர் ப்ராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

nakkheeran app

டிசி எக்ஸண்டண்ட் யுனிவர்ஸ்க்குள் அடங்கும் இந்த பேட்மேன் படத்தில் ஹீரோவாக ராபர்ட் பேட்டின்சன் நடிக்க மேட் ரீவ்ஸ் இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து பேட்மேன் லுக் எப்படி இருக்கிறது என்பதை வெளியிட்டது தயாரிப்புக்குழு.

இதே தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள டெனட் படத்தின் ரிலீஸ் தேதியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆகவே முன்னமே அறிவித்ததுபோல ஜூலை மாதம் 17அம் தேதி வெளியாகும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.

Advertisment