ஹாலிவுட்டில்தனக்கென ஒரு மேக்கிங் ஸ்டைலை உருவாக்கி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய 'இன்செப்ஷன்', 'தி டார்க் நைட்', 'இண்டெர்ஸ்டெல்லர்' உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கடைசியாக 'டெனெட்' படத்தை எடுத்திருந்தார். 2020ல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அடுத்து தற்போது 'ஓப்பன்ஹெய்மர்' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்.
இப்படம் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தில் ராபர்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிலியன் மர்பி நடிக்க ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் அணு ஆயுத சோதனை காட்சி இடம்பெறுவதால் உண்மையிலேயே அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு தத்ரூபமாக படமெடுத்துள்ளது படக்குழு.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான நிலையில்தற்போது புதியட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரின் ஆரம்பத்தில் அந்த அணுஆயுத சோதனை காட்சி சில நொடிகள் வருகிறது. அதுவே பெரிய கூஸ் பம்ப்ஸை தருகிறது. அதன் பிறகு ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் பற்றி விரிவாக ஒவ்வொரு காட்சியிலும் காண்பிக்கிறார்கள். 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரைலர் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூலை 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.