/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/82_41.jpg)
ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கிறிஸ்டின் ஆலிவர். 30 படங்களில் நடித்த இவர், தனது குழந்தைகள் மடிடா லிப்சர், அகிக் ஆகியோருடன் சுற்றுலா சென்றுள்ளார். கடந்த 4 ஆம் தேதி கிரெனடைன்ஸில் உள்ள பிக்யுயா தீவிலிருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கி சிறிய ரக தனி விமானத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கிறிஸ்டின் (51), மகள்கள் அகிக் (12), மடிடா (10) மற்றும் விமானத்தை இயக்கியவர் என 4 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்பு மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கிருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கூறுகையில், “விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சில கோளாறுகள் ஏற்பட்டு கடலில் மூழ்கியதாக” தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)