தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி, தற்போது விஷ்வாம்பரா படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வசிஷ்டா இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையேபாரிஸில்நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளதனது குடும்பத்துடன் சென்றிருந்தார் சிரஞ்சீவி. அதனை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் அவரிடம்செல்ஃபிஎடுக்க முற்பட்டார். ஆனால் சிரஞ்சீவி அவரைதள்ளிவிட்டுச்சென்றார். இது தொடர்பானவீடியோசமூகவலைதளங்களில்வைரலாகிவருகிறது.சிரஞ்சீவிற்குஎதிராகச்சிலர் கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதே போல், சமீபத்தில் மற்றொரு தெலுங்கு முன்னணி நடிகரானநாகர்ஜுனாவைவிமான நிலையத்திற்குள் இருந்த ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க முயன்றார். ஆனால்,நாகர்ஜுனாவின்பாதுகாவலர் அந்தநபரைபிடித்துதள்ளிவிட்டார். இது தொடர்பானவீடியோசமூகவலைதளங்களில்வைரலாகநாகர்ஜுனாமீது விமர்சனங்கள் எழுந்தன. பின்பு, இதுதொடர்பாகதனதுஎக்ஸ்தளப் பக்கத்தில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.