Skip to main content

போட்டிப் போட்டு ஆடிய ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் - டான்ஸ் மாஸ்டர் ஹரிகிரண் அனுபவம்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 Choreographer Hari Kiran Interview

 

ஆர்.ஆர்.ஆர்  உட்பட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள நடன இயக்குநர் ஹரி கிரண் தன்னுடைய திரையுலக அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஆர்.ஆர்.ஆர் பட வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு முக்கியமான காரணம் நடன இயக்குநர் பிரேம் ரக்சித் தான். என்னுடைய பணி சிறியதாக இருந்தாலும் அப்படிப்பட்ட ஒரு படத்தில் பணியாற்றியது பெருமையான விஷயம். படத்தில் இறுதியாக வரும் பாடலை நான் இயக்கினேன். பிரேம் ரக்சித் மாஸ்டர் என்னை அந்தப் பாடலில் பணியாற்றச் சொன்னார். ராஜமவுலி சார் தான் நினைப்பதை ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அவ்வளவு மெனக்கெடுவார். அனைத்தையும் முன்பே பிளான் செய்துவிடுவார். எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்.

 

செட்டில் ராஜமவுலி சாரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். ராம்சரண் சாரும் ஜூனியர் என்டிஆர் சாரும் அவ்வளவு எனர்ஜி நிறைந்தவர்கள். இருவரும் மிகச்சிறந்த டான்ஸர்ஸ். போட்டிப் போட்டு ஆடுவார்கள். அவர்களோடு பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாடலை 7 நாட்கள் ஷூட் செய்தோம். ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவம் தான். கீரவாணி சார் சிறந்த இசையை வழங்கினார். அந்த இசையே சிறந்த நடனத்தை வழங்க நம்மைத் தூண்டும். கீரவாணி சார் ஒரு லெஜண்ட். ஆஸ்கார் வாங்குவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு.

 

என்னுடைய நடன வாழ்க்கையில் ராஜுசுந்தரம் மாஸ்டருக்கு முக்கியப் பங்குண்டு. அவரோடு 8 ஆண்டுகள் நான் பயணித்தேன். மிகச்சிறந்த நடன இயக்குநர் அவர். அவரோடு பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை. காதல் மன்னன் படத்தில் டான்சர்களில் ஒருவராகப் பணியாற்றியபோது அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைவரையும் சமமாக மதிப்பவர் அஜித் சார். விஜய் சார் மிக வேகமாக நடன அசைவுகளை கிரகித்துக்கொள்ளக் கூடியவர். அவரோடு பணியாற்றும்போது நம்முடைய வேலை சுலபமாகிவிடும். அவ்வளவு வேகமாக அவர் பணியாற்றுவார். அவருடைய எனர்ஜி வேற லெவல்.

 

பெரும்பாலான நடிகர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உடையவர்கள். இதுவரை ஷூட்டிங்குக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். நடனத்துக்கு மொழி என்பதே கிடையாது. ராஜுசுந்தரம் மாஸ்டருடைய அசிஸ்டெண்டாக பணியாற்றியபோது பல பாலிவுட் படங்களிலும் வேலை செய்திருக்கிறேன். ஷாருக்கான் சாருடைய உழைப்பையும் நடனத்தையும் பார்த்து பிரமித்திருக்கிறேன். எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டாரோடு பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். இந்த வாய்ப்புகள் எல்லாம் கிடைத்ததற்கு கடவுளுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.