Cholas are coming ponniyin selvan movie update out now

Advertisment

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகளைமுடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " சோழன் வருகிறான், அதை கொண்டாடும் வாரத்திற்கு தயாராகுங்குகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.