Advertisment

"பயப்படாதீங்க, இது ரஞ்சித் படத்திற்காக..." - விக்ரம் வெளியிட்ட வீடியோ வைரல்

chiyaan vikram shared a video about his joined on twitter

Advertisment

விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்திலும் மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்துள்ளார். இதில் 'கோப்ரா' படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், 'பொன்னியின் செல்வன்' படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்க ஜி. வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று ட்விட்டரில் இணைந்தது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் விக்ரம். இதனை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "எல்லாருக்கும் வணக்கம். நான் சீயான் விக்ரம். நிஜமாகவே நான் தான், மாறுவேஷத்தில் இல்லை. இந்த கெட்டப் ரஞ்சித் படத்திற்கு, அதற்காக ரெடி ஆகி கொண்டிருக்கிறேன். பலரும் என்னிடம் ட்விட்டரில் இணைவதன் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நிறைய விஷயங்களைத் தெரியப்படுத்தலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அது எனக்கு சரி என்று பட்டது. ட்விட்டர் தொடங்கி பத்து, பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டது என நினைக்கிறேன். நான் கொஞ்சம் லேட் ஆனால் இது ஒரு நல்ல நேரம் என்று நினைக்கிறேன். இவை அனைத்தையும் விட, இந்த இணையதளத்தில் நிறைய அன்பு இருக்குமென்று கேள்விப்பட்டேன். எனவே அந்த அன்பை நாமும் கொஞ்சம் அனுபவிக்கலாம் என்று தான் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe