Skip to main content

'சியான் 60' பட அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

vikram

 

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சியான் 60'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் த்ருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

 

முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. பின், இயல்புநிலை திரும்பத் தொடங்கியதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவுசெய்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளுக்காக படக்குழு ஆயத்தமாகிவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி 'சியான் 60' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்