/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chiyaan60_ugjfn1cjebaec-min.jpg)
நடிகர் விக்ரம், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'சீயான் 60' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் தயாரிக்கும் இப்படம், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு, கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியபோது... “இதுவரை ‘சீயான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. கரோனா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும்" என சமீபத்தில் கூறினார். இந்த நிலையில் மீதமுள்ள ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக படக்குழு டார்ஜிலிங் சென்றுள்ளனர். அங்கு மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)