தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் சிரஞ்சீவி இன்று பிறந்த்நாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் நடிக்கும் 'விஸ்வம்பரா ' படத்தின் படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு ப்டத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. 

Advertisment

விஸ்வம்பரா படம் சிரஞ்சீவியின் 156வது படமாக உருவாகிறது. இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் தயாரிக்க திரிஷா கிருஷ்ணன்,  ஆஷிகா ரங்கநாத் , குணால் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். மௌனி ராய் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். வசிஷ்டா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.   

விஸ்வம்பராவின் கிளிம்ஸ், உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும், ஒரு முதியவருக்கும் இடையேயான உரையாடலுடன் தொடங்குகிறது. ஒரு மனிதனின் சுயநலத்தால் தூண்டப்பட்ட மிகப்பெரிய அழிவை முதியவர் விவரிக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த மீட்பர் இறுதியாக வெளிப்படுகிறார். அவர் இந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாவலராக-  மிக சக்தி வாய்ந்த - வியப்பில் ஆழ்த்தக்கூடிய பிரவேசத்தை உருவாக்குகிறார். கதை ஒரு புராணக் கதையை பற்றியதாக இருக்கிறது. அதில் சிரஞ்சீவி விஸ்வம்பராவின் பாதுகாவலராக தோன்றுகிறார். இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.‌