சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலாகக்கண்டறியப்பட்டு,உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது.இதனால் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHIRU-1-1-1024x682.jpg)
அப்போது ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் வீட்டிலுள்ள மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு மக்களிடையே ஒருசேர ஏதிர்ப்பும், ஆதரவும் பெருகி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.அதில்..."வரும் ஏப்ரல் 5ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு,நமது பிரதமரின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து,கரோனாவின் இருட்டையும், சோகத்தையும்,நாம் விளக்குகள் ஏற்றி விரட்டுவோம். நமது நாட்டுக்காக இணைந்து நிற்போம்.ஒருவர் மற்றொரு வருக்காகத்தான் நிற்கிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)