Advertisment

ரசிகையின் முழு மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட சிரஞ்சீவி! குவியும் பாராட்டுகள்!

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைதடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் எந்தவொரு பணியும் நடைபெறாததால் பெரும் பொருளாதாரசிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

gs

பல்வேறு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆகியோர், அத்தியாவசியபொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வரும் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கும் இவர்கள் நிதியுதவி அளித்து வரும் நிலையில், தன் பெண் ரசிகை ஒருவரின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி பெண்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவருக்கு இதயக் கோளாறு இருந்து வந்தது. இது குறித்துக் கேள்விப்பட்ட சிரஞ்சீவி, உடனடியாக நாகலட்சுமியின் அறுவை சிகிச்சைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பெரிய மருத்துவமனை ஒன்றின் மருத்துவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி,அறுவை சிகிச்சை நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். சிரஞ்சீவியின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

chiranjeevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe