chiranjeevi

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் இந்த வருடம், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், இளம் வயதிலேயே காலமானார். இவருடைய மனைவி மேக்னா ராஜ் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர்.

Advertisment

இவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்துத்திருமணம் செய்துகொண்டனர். சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது, மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.

Advertisment

கணவர் இறந்து மூன்று மாதங்களுக்கு மேலான நிலையில், மனமுடைந்து இருந்த மகளுக்குத் தந்தை சுந்தர்ராஜ் வளைகாப்பு நடத்த முடிவெடுத்தார். 'கணவர் இல்லாததால் எதற்கு வளைகாப்பு' என மேக்னா முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர், கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற மேக்னா ராஜ் ஒப்புக்கொண்டார். வளைகாப்பில் தன்னுடைய கணவரை மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக, சிரஞ்சீவி சர்ஜாவின் ஆள் உயர கட் அவுட்டை தன் அருகிலேயே வைத்து கொண்டு வளைகாப்பை நடத்தினார் மேக்னா. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது கணவர் கட்டவுட்டுடன் குழந்தையை வைத்துப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 'மறைந்த கணவரே உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறார்' என்று இணையத்தில் மேக்னா ராஜுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.