/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/332_14.jpg)
மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும்வரவேற்பைபெற்ற படம் 'லூசிஃபர்'. நடிகர்ப்ரித்விராஜ்இயக்கத்தில்மோகன்லால்நடித்து வெளியான இப்படம், பல்வேறு மொழிகளில்ரீமேக்செய்யப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் தெலுங்குரீமேக்கைமோகன் ராஜா இயக்கி வருகிறார்.கதாநாயனாகசிரஞ்சீவிநடிக்ககதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும்சல்மான் கான்இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சூப்பர்குட்ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர்ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்குதமன்இசையமைக்கிறார். 'காட்ஃபாதர்'எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'காட்ஃபாதர்' படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்தற்போது வெளியாகியுள்ளது. இந்தபோஸ்டரில்ஸ்டைலானலுக்கில்சிரஞ்சீவி அமர்ந்திருக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக தங்களதுட்விட்டர்பக்கத்தில் மோகன்ராஜாஉள்ளிட்டபடக்குழுவினர் பலரும் பகிர்ந்துள்ளனர். அதோடு ஒரு புதுவீடியோவையும்வெளியிட்டுள்ளனர். இந்தவீடியோரசிகர்களின்வரவேற்பைபெற்று தற்போது சமூக வலைத்தளத்தில்வைரலாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)