/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/47_35.jpg)
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த'வால்டர் வீரய்யா' படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலா ஷங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க தங்கைகதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தின்படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
சமீபகாலமாக ரீமேக் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சிரஞ்சீவி விஜய் நடித்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர்150' என்ற தலைப்பிலும், மோகன்லால் நடித்த'லூசிஃபர்' படத்தை 'காட்ஃபாதர்' என்ற தலைப்பிலும் தெலுங்கில்ரீமேக்செய்தார். அந்த வகையில், தற்போது அஜித்தின் 'வேதாளம்' பட ரீமேக்கைதொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தை ரீமேக்செய்ய முடிவெடுத்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'விஸ்வாசம்' படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை'கைதி நம்பர்150' இயக்கியவி.வி.விநாயக் இயக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியாகும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)