chiranjeevi

Advertisment

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சிரஞ்சீவி, ஸ்டாலினின் சிறப்பான ஆட்சி நிர்வாகத்திற்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, "தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கட்சி எல்லைகள் கடந்து தன்னுடைய சிறப்பான சில முன்னெடுப்புகள் மூலம் சிறந்த அரசியல்வாதியாக வளர்ந்து வருவதற்காகவும், சிறந்த பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் தலைவராக இருப்பதற்காகவும், கரோனா சூழ்நிலையைச் சிறப்பாகக் கையாண்ட அவரது நிர்வாகத்திற்காகவும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.