chiranjeevi makes guiness record

1978ஆம் ஆண்டு செப்டம்பர் 22ல் வெளியான ‘பிராணம் கரீது’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. இவர் கருப்பு வெள்ளை படக் காலத்தில் தொடங்கி இன்றளவும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது ‘விஸ்வம்பரா’ என்ற தலைப்பில் தனது 156வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி அறிமுகமான அதே தேதியில் அவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நேற்று(22.09.2024) நடந்த கின்னஸ் உலக சாதனை விருது நிகழ்ச்சியில், 45 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணித்து 156 படங்களில் நடித்து 537 பாடல்களுக்கு 24 ஆயிரம் வித்தியாசமான நடன அசைவுகளை ஆடியிருப்பதாக அவரை கெளரவித்து இந்த கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பாலிவுட் நடிகர் அமீர் கான் கொடுக்க சிரஞ்சீவி பெற்றுக் கொண்டார்.

Advertisment

அதைத் தொடர்ந்து கின்னஸ் சாதனை பெற்ற சிரஞ்சீவியை, தெலுங்கனா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்தினர். மேலும் ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா திரையுலகில் சிரஞ்சீவி ஆற்றிய சேவைக்காக கடந்த 2006ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் நடப்பாண்டில் பத்ம விபூஷண் விருதும் மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.