ராம் சரண் தயாரிப்பில் உருவான சைரா நரசிம்மா ரெட்டி படத்திற்குப்பிறகு நடிகர் சிரஞ்சீவி மீண்டும் அவரது மகன் ராம் சரண் தயாரிக்கும் 'ஆச்சர்யா' படத்தில் நடித்து வருகிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆன நிலையில் அவர் திடீரென இப்படத்திலுருந்து விலக அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளார். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் முக்கியக் கதாபத்திரத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Mahesh_babu.jpeg)
இந்நிலையில் இதுகுறித்து தற்போது சிரஞ்சீவி விளக்கமளித்துள்ளார். அதில்..."இதுபோன்ற செய்திகளெல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே கொரட்டாலா சிவா, ராம் சரணைபடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். நாங்கள் மகேஷ் பாபு பற்றிச் சிந்திக்கவே இல்லை. ராஜமௌலியிடம் கோரிக்கை வைத்து ராம் சரணை ஒரு மாதம் எங்கள் படப்பிடிப்புக்காக அனுப்பச் சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டு சரணை அனுப்பிவைத்தார். நானும் சரணும் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. ஒரு குரு, சிஷ்யன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறோம்'' என விளக்கமளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)