chiranjeevi family niharika konidela arrested drug case

கடந்த ஆண்டு அக்.02 அன்று மும்பையில் இருந்து, கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் இதேபோன்று போதைப்பொருள் ரெய்டில் தற்போதுசிரஞ்சீவி சகோதரர் மகளும் நடிகையுமானநிஹாரிகா கைது செய்யப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திரஓட்டலில் நடந்த நள்ளிரவு விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குஅதிரடியாக நுழைந்துகாவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்கைப்பற்றப்பட்டன. அத்தோடு போதை விருந்தில் கலந்து கொண்ட100 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்

Advertisment

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் நிஹாரிகா, பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்திரிமகள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களின்வாரிசுகள் இந்த போதை விருந்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதன்பிறகு கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின் பேரில் சொந்த ஜாமினில்விடுதலை செய்த காவல்துறையினர், அனைவரின் ரத்தம் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், போதை மருந்து பயன்படுத்தியவர்கள் யாரும்தப்ப முடியாது எனவும்தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நிஹாரிகா கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.