/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/E5qb9ewVcAMKFhW.jpg)
'தேவதாஸ்', 'கங்கா யமுனா', 'ஆன், தஸ்தான்', 'மொகல்-இ-அஸாம்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.
இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "இந்திய திரைப்படத்துறையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. லெஜெண்ட் திலீப்குமார் சாரின் மரணத்தால் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன். இந்தியா இதுவரை தயாரித்த மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் அவர். ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் & ஒரு தேசிய புதையல் அவர். பல தசாப்தங்களாக உலகை கவர்ந்தவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)