Chiranjeevi

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தில் விஜய்க்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்திற்கே பெரிய அளவில் முக்கியத்துவம் இருந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில்'உப்பெனா' படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி குறித்துப் பேசுகையில், "விஜய் சேதுபதி, சிறந்த மனிதர். அவர் எளிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட நடிகர். பிரதான கதாபாத்திரத்தில்தான் நடிப்பேன் என என்றும் பிடிவாதம் பிடித்ததில்லை. இந்தப் படத்தில் நடிக்க அவர் சம்மதித்ததே படத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. அவர், படத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அண்மையில் 'மாஸ்டர்' படத்தைப் பார்த்தேன். விஜய் சேதுபதியின், பவானி கதாபாத்திரத்தை அவ்வளவு நேசிக்கிறேன்" எனப் பேசினார்.