Advertisment

"கீர்த்தி சுரேஷ் அண்ணன் என கூப்பிடுவதை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை " - சிரஞ்சீவி

chiranjeevi abour keerthy suresh

தெலுங்கில், சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'போலா ஷங்கர்'. இப்படம் தமிழில் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக் ஆகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் மற்றும் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் லக்ஷ்மி மேனன் நடித்திருந்த நிலையில், தெலுங்கில் தமன்னா கதாநாயகியாகவும் கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படம், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகத்திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளி வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

அதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷைப் பாராட்டினார். கீர்த்தி சுரேஷ் குறித்து அவர் பேசுகையில், "இப்படத்தில் எனக்கு தங்கச்சியாக நடித்திருக்கிறார். நாளை என் படங்களில் கதாநாயகியாக நடிப்பார். கீர்த்தி போன்ற ஒரு அழகான பெண் என்னை அண்ணன் என்று அழைப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த அண்ணன் ஃபீலிங்கோடு எப்போதும் இருக்க வேண்டாம். இந்த ஒரு படத்திற்கு மட்டும்தான். எனது அடுத்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் அவரோடு ரொமேன்ஸ் காட்சிகளில் நடிப்பதைத்தவற விடமாட்டேன். உண்மையாகவே அவரது அற்புதமான படங்களால் நான் ஈர்க்கப்பட்டேன்." என்றார்.

Advertisment

மேலும், அவரது நடிப்புத் திறமையால் வியப்படைந்ததாகவும், அவருடன் பணிபுரிவது ஆற்றில் பயணம் செய்வது போலமிகவும் அழகாக இருப்பதாகவும் கூறினார்.

keerthy suresh chiranjeevi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe