தெலுங்கு மூத்த நடிகரரான சிரஞ்சீவி, கைவசம் மூன்று படங்களை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதுப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் அவரது 158வது படமாக உருவாகிறது.
இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான, கேவிஎன் புரொடைக்ஷன் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தமிழில் விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் பாபி கொல்லி இயக்குகிறார். இவர் சிரஞ்சீவியை வைத்து ஏற்கனவே ‘வால்டர் வீரய்யா’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான அறிவிப்பு போஸ்டடில் ஒரு சுவரை கோடாரி பிளக்கும் படி அமைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் துவங்கவிருக்கிறது.