தமிழ் திரையுலகில் 1980 முதல் 90 வரை முன்னணி இயக்குனராக வளம் வந்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ். இவர் இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் என்று பாலிவுட் புகழ் அமிதாப் புகழ்ந்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், இவரது மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய ‘சித்து பிளஸ்-2’ படம் 2010-ல் வெளிவந்தது. இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாக்யராஜ் சின்ன வீடு இரண்டாம் பாகத்தை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1985ஆம் ஆண்டு இவரது இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியாகிய வெற்றிப்படமான இதை தற்போது இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. படத்துக்கான திரைக்கதையை தயார் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தமிழில் முன்னணி இயக்குனர்களாக இருந்தவர்கள், தங்களின் வெற்றிப் படங்களை இரண்டாம பாகமாக எடுத்து வருவது தற்போது ஒரு ட்ரெண்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.