தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சந்தா கட்டாத காரணத்தால், சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அறிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழ் திரைப்படங்களுக்கு இனி டப்பிங் பேச முடியாது என சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisment

chinmayi

இவர் தமிழில் கடைசியாக 96 திரைப்படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியிருந்தார். இதனை அடுத்து சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் தமிழ் படங்களில் இனி டப்பிங் செய்யவே மாட்டார் என்று சொல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில் சமந்தா நடித்த தெலுங்கு படமான ஓ பேபி படத்திற்கு தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட இரு மொழிகளுக்கு சமந்தாவிற்காக டப்பிங் பேசியிருக்கிறார் சின்மயி. இதுகுறித்து சின்மயி ட்வீட் செய்துள்ளார். நான் டப்பிங் பேசியதற்கு காரணமாக இருந்தவர்கள் சமந்தாவும், இயக்குனரும்தான் என்று இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.