fsaf

கரோனா வைரஸ் பரவலைத்தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் இந்த நேரத்தில் கோப்பு பகிர்வு வலைத்தளமான 'வி டிரான்ஸ்ஃபர்' தளத்தைத் தடை செய்ய இந்தியா தனது இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் நிறுவப்பட்ட 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளம் ஒரே நேரத்தில் 2 ஜிபி வரை இலவசமாகப் பதிவேற்றி பகிர அனுமதிக்கிறது.

Advertisment

Advertisment

அதேபோல் பணம் செலுத்தும் பயனர்கள் ஒரே நேரத்தில் 20 ஜிபி வரை கோப்புகளைப் பகிர்ந்து வந்தனர். இது பெரும்பாலும் திரைத்துறையில் அதிகம் பயன்பட்டு வந்த நிலையில் இதைச்சமீபத்தில் இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை (DoT) தடை செய்துள்ளனர். இந்நிலையில் இந்த 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளம் குறித்து பாடகி சின்மயி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

''அவர்கள் ஏன் இந்தியாவில் 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளத்தைத் தடை செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், விளம்பரங்கள், பாடல்கள் பதிவுகள், வீடியோக்களை 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளதைப் பயன்படுத்தி அனுப்புகின்றனர். மேலும் இது நம்மில் பலருக்கு ஒத்துழைக்க உதவும் ஒரு கருவியாக இருந்து வந்தது.இந்தச் சேவையை நம்மில் பலர் உண்மையாகப் பணம் செலுத்தியும் பயன்படுத்தி வந்தனர்'' எனப் பதிவிட்டுள்ளார்.