/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/466_3.jpg)
ஹாலிவுட் திரையுலகில், அனிமேஷன் படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் மவுசு அதிகம். அந்த வகையில் 1995-ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'டாய் ஸ்டோரி' அனிமேஷன் படம் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து 'டாய் ஸ்டோரி' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. கடைசியாக இப்படத்தின் நான்காம் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியானது.
இதனிடையே 'டாய் ஸ்டோரி' படத்தில் இடம்பெற்ற 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரத்தை வைத்து உருவாகியுள்ள 'லைட் இயர்' படம் நேற்று (17.06.2022) வெளியானது. இப்படத்தை அங்கஸ் மேக்லேன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் 'லைட் இயர்' படத்திற்கு துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என கூறியும் 'லைட் இயர்' படத்திற்கு தடை விதித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)