தமிழகம், கேரளா, ஆந்திராதென்மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. கடந்த வருடம் டெங்குவால் கேரளா மற்றும் தமிழகத்தில் பலர் உயிரிழந்தனர். இந்த வருடம் அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Advertisment

nandamuri balakrishnan

இருந்தாலும் டெங்கு நோய் தாக்கம் ஒருசில ஊர்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவைபோல நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார்.

Advertisment

கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தகோகுல் கடந்த 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஜுனியர் பாலகிருஷ்ணா என்றழைக்கப்படும் கோகுலின் திடீர் மரணத்திற்கு தெலுங்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரம் கோகுலின் திடீர் மரணம் குறித்து நடிகர் பாலகிருஷ்ணன் சமூகவலைத்தளத்தில் மிகவும் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment