Advertisment

ஏ.ஆர். ரஹ்மான் வீட்டு விசேஷத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

Chief Minister stalin attending wedding reception AR Rahman daughter

Advertisment

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமீர் என்ற மகனும் கதீஜா, ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கும் தொழிலதிபரும் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் என்பவருக்கும் கடந்த மாதம் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று(10.6.2022) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவருடன் இந்த நிகழ்வில் துர்கா ஸ்டாலினும், கிருத்திகா உதயநிதியும் கலந்துகொண்டனர்.

tamil cinema ar rahman cm stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe