Advertisment

விக்னேஷ் சிவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல்வர் ஸ்டாலின்

 Chief Minister M.K Stalin at Vignesh Shivan shooting spot

Advertisment

'செஸ்ஒலிம்பியாட்2022', 1927-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இப்போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடக்கவுள்ளது. அதன் படி 44வதுசெஸ்ஒலிம்பியாட்போட்டிகள் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தசெஸ்ஒலிம்பியாட்போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நேருஉள்விளையாட்டுஅரங்கில் நடக்கவுள்ள இந்த போட்டிகளின் தொடக்க விழாவைவிக்னேஷ்சிவன் இயக்கவுள்ளார்எனக்கூறப்படுகிறது. அதற்கான பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே 44வதுசெஸ்ஒலிம்பியாட்போட்டிகளுக்கான விளம்பர படத்தையும்விக்னேஷ்சிவன் இயக்குகிறார், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த தகவல் வெளியான நிலையில் இதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ளநேப்பியர்பாலத்தில்நடைபெற்றவருவதாகதகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்கலந்துகொண்டுள்ளதாககூறப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்துமாற்றப்பட்டுள்ளதாகசொல்லப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின், படப்பிடிப்பில் நடித்துள்ளாரா அல்லதுகண்காணிக்கசென்றுள்ளாரா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்தானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ar rahman Chess vignesh shivan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe