/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/455_24.jpg)
தமிழ் சினிமாவின் பிதாமகனாக போற்றப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு முதலமைச்சருடன் இணைந்து தமிழ்நாடு அமைச்சர்கள் பலரும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் மரியாதை செலுத்தினர். இவர்களுடன் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் உடனிருந்தனர்.
இதனிடையே சிவாஜி கணேசனின் சிலையை மக்கள் பார்வைக்குப் படும்படி வெளியே அமைக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)