சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கிய முதலமைச்சர்!

edapadi palanisamy

கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அதிகமாகக் கூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் முதலமைச்சருக்கு, சமூக விலகலைப் பின்பற்றி ஷூட்டிங் நடைபெற முதலமைச்சர் அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

தற்போது இந்தக் கோரிக்கையை ஏற்று, சின்னத்திரைக்கு மட்டும் சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடைபெற முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe