தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாதஆளுமையான நடிகராக என்றென்றும் திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். நாற்பது வருடங்களாக முடிசூடா மன்னனாகத்திகழ்ந்து வரும் ரஜினிகாந்த்திற்குஉலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ரஜினிகாந்த் ரசிகர்மன்றங்கள் பெரிய அளவில் இருந்து வருகிறது.
ரஜினிகாந்த் ரசிகர்மன்றம் நற்பணிகளைச் செய்கின்ற மன்றங்களாகவும் செயல்பட்டு வருவதால் இதற்கென்று தமிழகமெங்கும் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என்று நியமித்து இயங்கி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு ட்விட்டரில் உள்ள தன்னுடையபக்கத்தில் ரஜினிகாந்த்இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியானது"என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்”.