Chhello Show OTT release netflix announced and deleted

Chhello Show OTT release netflix announced and deleted

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் இந்தியா சார்பாகப் போட்டியிடக் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் தேர்வானது. பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி இந்தியாவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இப்படம் வரும் 25ஆம் தேதி நெட் ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகும் என நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து பின்பு நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு பின்பு நீக்கியுள்ளதால் இச்செயல் ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment