Chhaava movie tax free in goa and madhya pradesh

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் லட்சுமன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘சாவா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் மகாராஷ்டிரா பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரூ.140 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த 'லெஜிம்' நடனக் காட்சி, மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களால் எதிர்ப்பை சம்பாதித்தது. இதனால் அந்தக் காட்சியை படத்தில் இருந்து படக்குழு நீக்கியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு கோவா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பேரரசர் சத்ரபதி சிவாஜியின் 395வது பிறந்தநாள்(19.02.2025) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “தேவ், தேஷ் மற்றும் தர்மம் ஆகியவற்றிற்காக சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வீரம், துணிச்சலை இந்தப் படம் விரிவாக பேசுகிறது. முகலாயர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய ஹிந்தவி ஸ்வராஜ்யத்தின் இரண்டாவது சத்ரபதியின் தியாகம், நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.