Advertisment

விஜய்சேதுபதி சொன்னார்...நான் பிக்பாஸிற்கு வந்தேன்...! - சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் 3 நிகழ்சியின் 38ஆம் நாளான நேற்று மொட்டை கடுதாசி என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு ஹவுஸ் மேட்டும் சக ஹவுஸ் மேட்ஸிடம் கேட்க தயங்கும் கேள்வியை மொட்டை கடுதாசி மூலம் கேட்கலாம். அந்த கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஹவுஸ் மேட் பதில் அளிக்கவேண்டும். அதன் படி நடிகர் சேரனுக்கு ''திரைத்துறைக்குள் நுழைந்து பல வெற்றிகளையும், பெயரையும், புகழையும் சம்பாதித்த சேரன், எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும்...?'' என்ற கேள்வியை சரவணன் எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்து சேரன் பேசியபோது....

Advertisment

cheran

''பெரிய இயக்குனர் ஆன பிறகும் நான் கஷ்டங்களை அனுபவித்தேன். ஆட்டோகிராப் தான் என்னுடைய கடைசி வெற்றி படம். அதன் பின் எதுவும் எனக்கு சரியாக அமையவில்லை. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. மேலும் எனக்கும் மக்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு 4 வருடங்கள் ஆகிறது. எனவே மீண்டும் அதை புதுப்பிக்க நினைத்தேன். இன்னும் சொல்லப்போனால் என்னை இங்கு அனுப்பியதே விஜய்சேதுபதிதான். அவர் என்னிடம், 'சார் நாம் நான்கு வருட இடைவெளி விட்டுட்டோம். ஒன்னு இன்றைக்குள்ள அடுத்த தலைமுறைக்கு உங்களை தெரியணும், இன்னொன்று இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அடித்தட்டு மக்கள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்கு உங்களுடைய 35 வருட அனுபவம் பாடமாக அமைந்து எதாவது ஒரு சமயத்தில் உதவி புரியும். அதனால உங்களுக்கு எப்போதெல்லாம் டைம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் உங்கள் அனுபவங்களை அடுத்தவரிடம் பகிர்ந்துக்கோங்க. அது பல இடங்களில் மக்களுக்கு உதவும். அதனால் நீங்க உள்ளே போகணும் சார்' என விஜய் சேதுபதி சொன்னார். அதனால் நான் இங்கு வந்தேன்'' என்றார்.

Advertisment

cheran Bigboss3
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe