Advertisment

''அது போன்ற ஒரு கதையைத்தான் விஜய் சேதுபதிக்குத் தயார் செய்துள்ளேன்'' - சேரன்

திருமணம் படத்திற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான நடிகர், இயக்குநர் சேரன் புதிய படத்தை இயக்குவதற்கான கதையைத் தயார் செய்துள்ளார். இந்தக் கதையில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

Advertisment

hfhfh

விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் இயக்குநர் சேரன் இப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...''தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Vijay Sethupathi cheran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe