Skip to main content

‘விஷாலுக்கு ஓட்டு போட்டால் நமக்கு சூடு சொரணை இல்லை என்று அர்த்தம்’- இயக்குனர் சேரன் ஆவேசம்...

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு வருடந்தோறும்  கல்வி உதவித்தொகை வழங்குவார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்று தனி அதிகாரி வந்துவிட்டதால், அவர்களால் வழங்க இயலவில்லை. இந்த ஆண்டு நலிந்த தயாரிப்பாளர்களின் 26 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ஒட்டுமொத்தமாக 5 லட்சம் தேவைப்பட்டது. அதை சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பில் போட்டியிடும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தருவதாக ஒப்புக்கொண்டார்.
 

vishal cheran

 

 

அந்தப் பணத்தை, விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், தயாரிப்பாளர்கள் கேயார், சத்யஜோதி தியாகராஜன், முரளிதரன், டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் சேரன், 
 

''3 ஆண்டுகளுக்கு முன்பு, அனுபவம் இல்லாத ஆட்களை உட்கார வைக்காதீர்கள் அவஸ்தைப்படுவோம் என்று சொன்னேன். படத்தில் சண்டையிடுவது போல அனைவருடன் சண்டையிட்டு வந்து விஷால் உட்கார்ந்துவிடவில்லை. அவருக்கு நம் உறுப்பினர்கள் தான் வாக்களித்தோம்.
 

ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்க யோசிக்கிறோம், இறுதியில் தவறாக ஒருவரைத் தேர்வு செய்கிறோம். அது நாட்டுக்கும் சரி, நமக்கும் சரி. இந்த முறையாவது நடிகர் சங்கத்துக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் சரியான தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே திரையுலகை இனிமேலாவது காப்பாற்ற முடியும். நாம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டோம். அனைத்து தயாரிப்பாளர்களுமே நஷ்டத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத்தான் கொஞ்சம் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் இங்கு அமர வேண்டும்.
 

தயாரிப்பாளர் சங்கத்தில் அனுபவமில்லாத ஒருவர் தலைவராக வந்து அமர்ந்ததால், இவ்வளவு பெரிய பிரச்சினையைச் சந்தித்துவிட்டோம். சிந்தனையில்லாதவர்களை அமர வைத்தால், நாம் தான் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.


கிட்டத்தட்ட 200 புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். வந்து நஷ்டப்பட்டு, அனைத்தையும் இழக்கிறார்கள். அப்படியிருக்கும் போது எதற்கு தயாரிப்பாளர் சங்கம். 10 நடிகர்கள், 10 தயாரிப்பாளர்களை மட்டும் காப்பாற்றுவதற்கு சங்கம் கிடையாது. முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டுமென்றால், தலைவராக அமர்பவர் முக்கியமானவராக இருக்க வேண்டும்.

 


அதற்கு பாரதிராஜா சார் வழிவகை செய்ய வேண்டும். ஏன் அவரே தலைவராக வர வேண்டும். அவரை சூழ்ச்சி செய்து, இயக்குநர் சங்கத் தலைவராக உட்கார வைத்துவிட்டார்கள். இயக்குநர்கள் சங்கத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தயவுசெய்து தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக அமருங்கள். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பாரதிராஜா சாரும், நடிகர் சங்கத் தலைவராக பாக்யராஜ் சாரும் வரவேண்டும். அப்படி வந்துவிட்டால், 2 ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகம் மாறும்.
 

இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் கூட தோற்றுப் போய்க்கொண்டுத்தான் இருக்கிறது. வருமானத்தைப் பெருக்க பல்வேறு திட்டங்களை போன முறை தேர்தலுக்குப் போட்டோம். அதை யாரும் படித்துக் கூடப் பார்க்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலே சொல்லி, நின்று, ஜெயித்து, கெட்ட பெயர் வாங்கி ஒதுங்கிவிட்டார். இதற்கு மேலும் விஷாலுக்கு ஓட்டு போட்டால் நமக்கு சூடு சொரணை இல்லை என்று அர்த்தம்.
 

ஒரு பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால். இந்தச் சங்கத்தில் ஒரு விண்ணப்பம் கொடுத்தால், அதற்கு பதில் கூட கொடுக்க முடியாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இருந்தது. அவ்வளவு கேடு கெட்ட நிர்வாகமாக இருந்தது. மீண்டும் விஷால் தலைவராக நின்றாலே, ஒரு பெரிய போராட்டம் இருக்கிறது. எங்களுக்கு அவர் வேண்டாம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்னா பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.