Advertisment

"ரெண்டு காரணங்களுக்காக விஜய் சேதுபதி என்னை பிக்பாஸில் கலந்துகொள்ளச் சொன்னார்" - சேரன் பகிர்ந்த சீக்ரட்  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் -3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக தொன்னூறு நாட்களைத் தாண்டி உள்ளே இருந்த இயக்குனர் சேரன் சென்ற நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமல்ஹாசனுடன் பழகியது குறித்தும் தான் பிக்பாஸில் கலந்துகொள்ள முக்கிய காரணமாக விஜய் சேதுபதி இருந்தது குறித்தும் சேரன் பகிர்ந்துகொண்டார்...

Advertisment

cheran vijay sethupathi

"கமல் சாரை வைத்து ஒரு படம் இயக்க எனக்கு ஆசைதான். ஆனா அது குறித்து என்னால் அங்கு பெரிதாக பேச முடியலை. ஏன்னா, உள்ள போகும்போது ஒரு 15 நிமிஷம், வெளியே வந்தப்போ ஒரு 15 நிமிஷம் அந்த மேடையில் அவரை சந்தித்ததுதான். மற்றபடி அவரை நான் சந்திக்கவில்லை. ''தேவர் மகன் 2'க்கு கதை இருக்கு சார், நீங்க சொன்னீங்கன்னா உடனே பண்ணலாம்' என்று மட்டும் அவரிடம் சொல்லியிருக்கேன். ஆனால் அதைத் தாண்டி இன்னும் எதுவும் பேசவில்லை. வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக அவருடன் பணியாற்றுவேன்.

விஜய் சேதுபதி என்னை பிக்பாஸ் வீட்டிற்குப் போகச் சொன்னது உண்மைதான். நான் அவரை வைத்து படம் இயக்க ரெடி ஆகிவிட்டேன். ஜனவரி, பிப்ரவரில ஷூட்டிங் போறதா இருந்தது. அப்போதான் இந்த வாய்ப்பு வந்தது. அது பற்றி கேள்விப்பட்டு, விஜய் சேதுபதி என்னை பிக்பாஸில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார். போனா ரெண்டு விஷயங்கள் நடக்கும்னு சொன்னார். ஒன்னு, சில வருடங்களாக நீங்கள் அதிகம் படங்கள் பண்ணாததால் இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு உங்களை குறைவாகத்தான் தெரியும், நீங்க அதில் கலந்துகொண்டால் மீண்டும் உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும் வாய்ப்பு ஏற்படும். இன்னொன்னு, உள்ள உங்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கும். அதை நீங்கள் மக்களுக்கு சொல்லலாம் என்றார். சீக்கிரமே நான் அவரை வைத்து படம் இயக்குவேன்".

Biggboss vijaysethupathi cheran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe