"இந்தப் படம் ஏன் தியேட்டரில் ஓடவில்லை என்ற கேள்வி மீண்டும் எழும்" - சேரன் 

vdsbsv

'திருமணம்’ படத்துக்குப் பிறகு நடிகர் சேரன் நடித்த படம் ‘ராஜாவுக்கு செக்’. எமோஷனல் திரில்லராக உருவான இந்தப் படத்தை ஜெயம் ரவியின் 'மழை' பட இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இப்படம், ஆவரேஜ் ஹிட்டடித்தது. இந்நிலையில், இப்படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து நடிகர் சேரன் ட்வீட் செய்துள்ளார். அதில்..

"ஒரு வழியாக ‘ராஜாவுக்கு செக்’திரைப்படம் தொலைக்காட்சியை வந்து அடைந்துவிட்டது. இனி எல்லா குடும்பங்களையும் போய்ச் சேரும். யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பமும் பார்த்து பாராட்டி கொண்டாடப்போகிறார்கள். இப்படம் ஏன் தியேட்டரில் ஓடவில்லை என்ற கேள்வி மீண்டும் சமூக வளைதளங்களை நிரப்பும். அதற்கான பதிலையும் அங்கேயே காணலாம். எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே. கலர்ஸ் தொலைக்காட்சி இப்படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறார்கள் போல. ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு நீங்கள் காணலாம்" என பதிவிட்டுள்ளார்.

cheran
இதையும் படியுங்கள்
Subscribe