Advertisment

“சிந்திப்போம் சிவப்பு வர்ணம் மட்டுமல்ல என்பதை...” - பா.ரஞ்சித் படத்தை பாராட்டிய சேரன்

300

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடைக்ஷன்’ தயாரிப்பில் கெத்து தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’. இப்படத்தில் ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ‘குண்டு’ பட இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் பழங்குடியின மக்களை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. 

Advertisment

படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதில் கலையரசன் - வின்சு சாமின் காதல், மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராணுவப் படைகளின் தேடுதல் வேட்டை உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தது. பின்பு ‘காவக் காடே’ பாடல் வெளியாகியிருந்தது. இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுனர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெலிவரி செய்யும் பேகில் கூட படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு விளம்பர பணிகளை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் படத்தின் ஸ்பெஷல் ஷோ நடந்துள்ளது. இதில் சேரன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் முத்தரசன், திருமாளவன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து படக்குழுவினரை அவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், “அதிகாரம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் எளியவர்கள் வாழ்வில் ஊடுருவி நம்மை முன்னேறவிடாமல் அடிமைகளாக்குகிறது என்பதை சொல்லும் ஆகச்சிறந்த படைப்பு தோழர் அதியன்ஆதிரை-யின் திரைக்கதையும் உருவாக்கமும் அவரை தமிழின் மிகச்சிறந்த இயக்குனராக ஆக்குகிறது.

அப்படி ஒரு இயக்குனரை அடையாளம் கண்டதற்கும், அவருடைய சிந்தனைகளை படமாக்கும் வாய்ப்பை தொடர்ந்து உருவாக்கி  தருவதற்கும் உங்களுக்கு(பா.ரஞ்சித்) மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டு மணி நேரம் படம் ஏற்படுத்திய வலியை கடக்கவே இரண்டு வாரங்கள் ஆகும்போல. சிந்திப்போம் சிவப்பு வர்ணம் மட்டுமல்ல  என்பதை” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisment
kalaiyarasan attakathi dinesh pa.ranjith cheran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe