''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிக்கு வாழ்த்துகள் அருண்'' - சேரன் வாழ்த்து!

bvxzdv

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் தொலைக்காட்சிகளிலும் புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப முடியாததால் பெரும்பாலான டி.வி. சேனல்கள் திரைப்படங்களைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் நேற்று சேரன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த பாண்டவர் பூமி படம் சன் டிவியில் ஒளிபரப்பானது.

இதைக் கவனித்த இயக்குனர் சேரன், ''இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள் பெயரை இந்தச் சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம்.. இன்னும் நெடுந்தூரம் போங்கள். பார்த்து ரசிக்கிறேன். நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி. நன்றி'' என அருண்விஜயை ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த நடிகர் அருண்விஜய், ''என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி. செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது!!'' என சேரன் ட்வீட்டுக்கு பதில் ட்வீட் போட்டார். மீண்டும் இதைப்பார்த்த சேரன், ''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிகளுக்கு வாழ்த்துகள் அருண். நன்றி'' பதில் ட்வீட் செய்து இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

arun vijay cheran
இதையும் படியுங்கள்
Subscribe