Advertisment

'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..' - நாஸ்டால்ஜிக் மோடில் சேரன்

cheran memories tweet

Advertisment

'வெற்றிக்கொடிகட்டு', 'பாண்டவர் பூமி' , 'ஆட்டோகிராப்' என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சேரன். நடிகராகவும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த சேரன் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக 'திருமணம்' படத்தை இயக்கியிருந்தார். 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சேரன் பல்வேறு விஷயங்கள் குறித்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தான் படித்த பள்ளியின் அனுபவங்கள் குறித்து நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எனது ஊர்.. நான் படித்த துவக்கப்பள்ளி. அத்தனை ஆசிரியர்களின் முகம் வந்து போகிறது.. காமராஜர் கொண்டு வந்த சத்துணவு வாங்க தட்டேந்தி நின்றது, சுதந்திர கொடியேற்றி சுண்டல், மிட்டாய் வழங்கி லீவு விட்டது, மண் தரையில் உட்கார்ந்து படிக்கும்போது கட்டெறும்பு கடித்ததுஎல்லாம் ஞாபகம் வருகிறது" எனக் குறிப்பிட்டுஇது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

cheran
இதையும் படியுங்கள்
Subscribe