style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் சேரன் நீண்ட நாட்களுக்கு பிறகு 'திருமணம் சில திருத்தங்களுடன்' என்ற படத்தை இயக்குவதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். தம்பி ராமையா மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆகிறார். சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.