Advertisment

7 வருடம் கழித்து நன்றி சொன்ன சேரன்... கலாய்க்கும் ரசிகர்கள்!

cheran

Advertisment

'பாரதி கண்ணம்மா', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். நல்ல படங்களைப் பாராட்டுவது, ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது என சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சேரன், 7 வருடத்திற்கு முன்பு தனக்கு வந்த பிறந்தநாள் வாழ்த்துப் பதிவிற்குத் தற்போது நன்றி தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இயக்குநர் சேரன் வருடந்தோறும் டிசம்பர் 12-ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி, பிரபல தனியார் தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு சேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பதிவைத் தற்போது கண்ட சேரன், வருடத்தைக் கவனிக்காது 'மிக்க நன்றி. தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது' எனப் பதிலளித்தார்.

7 வருடப்பழைய பதிவிற்குச்சேரன் நன்றிதெரிவித்ததும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்கத் துவங்கினர். பின், வருடத்தைக் கவனித்து சுதாரித்த சேரன், அப்பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும், ரசிகர்கள் சிலர் முன்னரே அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவிட்டனர். அது, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

cheran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe